திரு.வேணுகோபாலை ஏன் பிடிக்கும் ?
இதற்கு பல காரணங்கள் உள்ளன.
1. திரு.வேணுகோபால், உதவி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு அயராமல் முடிந்தவரை வேண்டியதை செய்து, அவர்களின் குறைகளை போக்கியிருக்கிறார். இனிமேலும், அவ்வாறே செய்வார் என்பது என் நம்பிக்கை .
2. திரு.வேணுகோபால் ஒரு நல்ல இசைக்கலைஞர் என்பது பலருக்கு தெரியாது. தன் இசையால் பலரையும் தன் வயப்படுத்துபவர் என்று அவர் நண்பர்கள் கூறுகிறார்கள்.
3. தன்னை நம்பி வந்த ஒரு பெண்மணிக்கு, ஒரு முறை மிகப்பெரிய உதவியை செய்தவர் திரு.வேணுகோபால். அத்தகைய உதவியை நானறிந்து யாரும் செய்ததில்லை !
4. அவருடைய சாதுர்யமும் (கொஞ்சம் சாணக்கியத்தனமும்) அவரைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரும்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
5. தன் சிறு வயதில், சிறந்த அறிவுள்ளவராகவும், தைரியசாலியாகவும் திகழ்ந்தார். ஆனால், அவரது அன்னை, வேணுகோபால் சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்திருப்பதாகக் கூறுகிறார். சிறுவயதில் குறும்புகள் சகஜம் தானே !
6. தன்னை நாடி வந்த புத்திசாலி மாணவன் ஒருவன், திரு.வேணுகோபாலின் செறிவு மிக்க வார்த்தைகளை கேட்டு, வாழ்வில் வெற்றியடைந்து, சிகரத்தைத் தொட்டதை மறக்க முடியுமா என்ன ?
7. திரு.வேணுகோபால் நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். தனது நண்பர் ஒருவருக்கு அவர் கேட்காமலேயே வேண்டிய உதவியை செய்து, நண்பரின் மனம் குளிர வைத்தவர்.
8. ஏன், பல அயல் நாட்டவர் கூட அவர் பால் ஈர்க்கப்பட்டு, திரு.வேணுகோபாலை தங்கள் தலைவராகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இத்தகைய நல்ல உள்ளமும் குணங்களும் கொண்ட திரு.வேணுகோபாலை, நானும் இன்னும் பலரும் விரும்புவதில் என்ன பெரிய ஆச்சரியம் இருக்க முடியும் ?? அவரிடம் பிடிக்காத ஒன்று என்று கூற வேண்டுமானால், சிறு வயதில் அவர் இளம்பெண்களை சற்று அதிகமாக நையாண்டி செய்திருப்பதை சுட்டிக் காட்டலாம் ! மற்றபடி, திரு.வேணுகோபால் ஓர் அசாதாரண பெர்சனாலிடி என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
*******************************
விஷ்ணுவின் அம்சமான, குழலூதும் கண்ணபிரானாகிய பகவான் வேணுகோபாலனை வெறுப்பவர் யாருமிலர் :)
பின் குறிப்பு: பதிவை மறுபடியும் வாசிக்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 பாயிண்ட்களின் விவரம் கீழே:
1. வேணுகோபால சுவாமி உலக ரக்ஷகர் !
2. புல்லாங்குழல் வாசிப்பவர் !
3. திரௌபதிக்கு அபயமளித்தவர் !
4. குருஷேத்திர யுத்த வெற்றிகளுக்கு உதவியவர் !
5. காளிங்கனை அடக்கியவர், வெண்ணெய் திருடியவர் !
6. பார்த்தனுக்கு கீதோபதேசம் செய்தவர் !
7. ஏழை சுதாமாவுக்கு உதவியவர் !
8. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க நாயகர் !
என்ன, நான் சொன்னதெல்லாம் சரி தானே, அடிக்க வர மாட்டீர்கள் என்ற சின்ன நம்பிக்கையில் தான், இப்படி ... ;-)
ஆக்கத்திற்கு ஊக்கம் : நண்பர் 'தமிழினி' முத்து அவர்கள் !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
24 மறுமொழிகள்:
Good one..:)))
http://muthuvintamil.blogspot.com/2006/07/3.html
hehe link kuduthirukalamee...
anonymous, Muthu, CT,
கருத்துக்களுக்கு நன்றி.
Muthu,
Why don't you give my post's link in your blog as you are extremely popular :)
Nambi,
Thanks !
//Also he had so many "keeps" - Gopiars.
//
:) I did talk about HIS eve teasing ;-)
Nice :)
என்னங்க.. எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க :-)
***
பரவாயில்லை, நல்லாத்தான் இருக்கு பதிவு, கலக்குங்கள் !!
ரொம்ப ரொம்ப முக்கியமான காரணம் வேணுகோபால் ஒரு பாப்பான்!
ஐயா உரிச்ச வெங்காயம்,
//ரொம்ப ரொம்ப முக்கியமான காரணம் வேணுகோபால் ஒரு பாப்பான்!
//
எனக்கு தமிழ் பார்ப்பனர்களை மட்டும் தான் பிடிக்கும், தெலுங்கு பார்ப்பனர்களை பிடிக்காது ;-)
திரு.வேணுகோபாலை எனக்கும் மிக மிகப் பிடிக்கும் பாலா. :-)))))
தூள்..!
உரிச்ச வெங்காயம்... 'உரிச்சும்' திருந்தலயா?!
நல்லா கேட்டீங்க நாக்கைப் புடுங்கும்படி!
சோம்பேறிப் பையன்,
//என்னங்க.. எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க :-)
//
நான் மட்டும் தான் :) நன்றி !
குமரன்,
//திரு.வேணுகோபாலை எனக்கும் மிக மிகப் பிடிக்கும் பாலா. :-)))))
//
உங்களுக்கு பிடிக்காமல் போகுமா :)
நன்றி !
மாயி,
//உரிச்ச வெங்காயம்... 'உரிச்சும்' திருந்தலயா?!
//
:))))))))) நன்றி !
வேணுகோபாலன் ஒரு யாதவர் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாது இருக்கும் உரிச்ச வெங்காயம் சற்றே யோசிக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஒரு யாதவர் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாது இருக்கும்//
:))
உரிச்ச வெங்காயம்ன்னா ஒன்னும் இல்லாததுன்னு தானேங்க பொருள்? அப்படியிருக்க அடிப்படை அறிவை எதிர்ப்பார்க்கலாமா? :-)
"வேணுகோபால் ஒரு யாதவர் என்பது அடிப்படை அறிவா???"
ஆம். பாரதம், பாகவதம் படித்ததாக யார் கூறிக் கொண்டாலும் அவருக்கு இந்த அடிப்படை அறிவு தேவையே. அதே போல ராமாயணம் தெரிந்தவர் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றும் கூறக் கூடாது!
அன்புடன்,
டோண்டு ராகவன்
ddd
மேலே உள்ளது ஒரிஜினல் "பொன்ஸ்" இட்ட பின்னூட்டம் இல்லை என்பதால், அதை நீக்கியுள்ளேன் !
ராபின் ஹூட், டடீண்டு, அனானிமஸ், பொன்ஸ்,
வருகைக்கு நன்றி !!!
போலிஸ்காரன்,
//இங்கே பின்னூட்ட கயமை எதுவும் நடைபெறவில்லை. நன்றி.
//
மிக்க நன்றி, ஐயா :)
என்றென்றும் அன்புடன்
பாலா
ஐயா, கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க.
ஒரு மனங்கவர் கள்வனைப் பற்றிய சுவையான பதிவில் ஏனய்யா சாதியை இழுக்கிறீர்.
எல்லாம் ஓரு மார்க்கமாத்தேன் திரியறானுவ.
ஓரு சந்தேகம்.
வேணுகோபாலன் யாதவராய் வளர்ந்தான். யாதவராய் பிற்ந்தானா?
""""veebee said...
ஓரு சந்தேகம்.
வேணுகோபாலன் யாதவராய் வளர்ந்தான். யாதவராய் பிற்ந்தானா?""""
அரக்கன்...கம்சன் தங்கை தேவகியின் மகன்...அப்ப அரக்கர் குலம்...ஆனால் தந்தை வசுதேவர் யாதவ குலம்...அதனால் யாதவ குலம்.....
""யாதவ அரக்கன் "" அப்படீன்னு சொல்லலாமா ? :))))
பாலா. ஒரிஜினல் பொன்ஸ் இடாத அந்தப் பின்னூட்டத்தை முழுதுமாக அழித்துவிடுங்கள்.
VeeBee, Saravanakumar,
nanRi !
Kumaran,
As per your suggestion, I have removed the comment COMPLETELY !
பாலா அவர்களே,
இந்த பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்.
பாரதியார் முதற் கொண்டு, மருத காசி,கண்ணதாசன் வரை கண்ணனை போற்றி பாடதவர்கள் யார்?
"நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன், கண்ணா என் கையைத் தொடாதே" என்று தொடங்கும் பாடல், மற்றும்
"கங்கை கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்", "கண்ணா கருமை நிற கண்ணா","எங்கிருந்தோ வந்தான்,இடைச் சாதி நான் என்றான்",
"காத்திருப்பான் கமலக்கண்ணன்"
போன்ற பாடல்கள் எத்தனை எத்தனை?
பாலா
Post a Comment